மழலைப் பருவம்
பள்ளிப் பருவம் என
வாழ்வில்
மகிழ்ச்சியான தருணங்கள்
நம் எல்லாருக்கும் உண்டு..
இன்று
மகிழ்ச்சியான தருணங்களை
நினைத்துப் பார்ப்பதற்குகூட
நம்மிடம் மகிழ்ச்சி இல்லை...
பிறந்தவுடன் ராகு தசை நடந்தால்
பெற்றோரைப் பிரித்து..
சந்தோஷத்தைக் கெடுத்துவிடும்..
6, 8, 12 தசைகள்
வாழ்க்கையின் திசையை மாற்றிவிடும்..
பாவ கிரகங்கள்
பார்வைபெற்ற
இணைவுபெற்ற
பாவ ஆதிபத்தியம்பெற்ற
நல்ல தசைகளும்
கெடுதலையே செய்கிறது..
இந்தக் கஷ்டம் என
சொல்லமுடியாத அளவுக்கு
நோய், எதிரி, கடனால்
அவதிகள் பல பட்டு
மகிழ்ச்சியை தேடி
அலைகிறார்கள்...
கெட்ட நேரங்களை சொல்லும்போது
கெட்டது உடனே ப-க்கிறது..
நல்ல நேரம் என்று சொன்னால்
நல்லது நடக்க தடை ஏற்படுகிறது..
மொத்தத்தில் நல்லதே நடக்கவில்லை..
எனக்கு மட்டும் ஏன்
என் வாழ்வில்
நல்லதே நடக்காதா?!..
என் வாழ்வில்
மகிழ்ச்சியான தருணங்கள்
இனி எப்போது வரும்?..
நையாண்டி சித்தரே
நல்லது நடக்குமா? நடக்காதா?..
நல்ல நேரம்
மகிழ்ச்சியான நேரம்
மகத்துவமான நேரம்
செல்வ செழிப்பான நேரம்
புகழ்பெறும் நேரம் என
அனைத்து சந்தோஷங்களும்
கிடைக்கக்கூடிய நேரம்..
அதிகமாய் எல்லாருக்கும் கிடைக்காது..
பஞ்சமஸ்தானம்
வலுப்பெற்றவனுக்கே
மகிழ்ச்சியான தருணங்கள் ஏராளம்..
ஐந்தாம் இடமான பூர்வபுண்ணியம்
சுப கிரகங்களால்
சுப கிரகங்களுடன்
சுபமாய் இருப்பவனுக்கே
நினைத்தது நினைத்தபடி நடக்கும்..
எல்லாருக்கும்
நல்ல காலம் உண்டு
நல்ல நேரத்தை
நல்லபடியாய்
பயன்படுத்தினால்...
முத-ல் ஒருவனுக்கு
லக்னாதிபதி சுபப் பலமாக
இருக்க வேண்டும்..
இரண்டாம் அதிபதி தசை
சுப கிரக பார்வை இணைவுபெற்று நடந்தால்..
நல்ல கல்வியும்
நல்ல வருமானமும் நல்ல குடும்பமும்
நல்ல முன்னேற்றமும்
ஏற்பட்டு நலமாக வாழ்வர்..
மூன்றாம் அதிபதி தசை
சுகமாக இருந்து தசை நடந்தால்
எடுத்த முயற்சிகüல்
வெற்றி கிடைக்கும்..
முப்போகம் நெல் விளைந்து
முன்னோர்க்கும் படைப்பான்...
நான்காம் அதிபதி தசை
நல்ல முறையில் இருந்தது நடந்தால்
நான்கு வழியில் பணம் கிடைக்கும்..
அத்தனை சுகத்தையும்
அனைத்து வழிகளிலும்
அனுபவிப்பான்..
ஐந்தாம் அதிபதி தசை நடந்தால்
அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வான்..
அகிலம் போற்றும்
அற்புதமான வாழ்க்கை உண்டு..
சுபகிரகம் ஐந்தாம் இடத்தில் பார்த்துவிட்டால்
அற்பனுக்கும் அதிர்ஷ்ட வாழ்க்கை உண்டு..
அவதிப்படுத்தும் ஆறாம் அதிபதி தசையும்
அவ பலன் குறைத்து
அடங்கிப் போகும்..
லக்ன அதிர்ஷ்ட யோக கிரக பார்வைபெற்றால்...
ஏழாம் இடம்
கெட்டுப்போகாமல்
சுப கிரகம் சூழ்ந்து இருந்தால்..
எண்ணியதெல்லாம் கொடுக்கும்
ஏழாம் அதிபதி தசை..
எட்டாம் இடம் கெட்டுப் போய்
ஏடாகூடமாய் பலமிழந்து நின்று
சுபகிரகம் கை கொடுக்க
குபேர கோடீஸ்வர யோகம் கிடைக்குமப்பா..
ஒன்பதாம் இடத்தில்
உட்கார்ந்த சுப கிரகம்..
சுபகிரகப் பார்வை பெற்றால்
சுதந்திரமான வாழ்க்கை சுகமாய் உண்டு..
பத்தாம் அதிபதி தசை
பல கிரகம், சுபம் பெற்று
பலமாக இருந்தால்..
பவர்ஃபுல்லான பதவி கிடைத்து
பார் போற்ற வாழ்வான்..
பதினோராம் இடத்து தசை
சுகாதிபதிகளால் பார்க்கப்பட்டு
சுபமாக இருந்தால்..
அள்ள அள்ள பணம்
திகட்ட திகட்ட சுகம் கிடைக்கும்..
பன்னிரண்டாம் இடம்
சுப வலுப்பெற்று
தசை நடந்தால்
வெளிநாட்டில் சுகம் காண்பான்..
எந்த தசை நடந்தாலும்
தசாநாதன் கெட்டுப் போகாமல்
புக்திகள் தசாநாதனுக்கு
மறையாமல் இருந்தால்..
கெடுபலன்கள் பெரிதாய்
வராதப்பா...
கெட்ட தசையில்
அவதிப்பட்டவனுக்கு
அடுத்த தசையில்
அதிர்ஷ்டம் உண்டு..
அடுத்தடுத்து வரும் தசை
அடுக்கடுக்கான
சோதனை தந்தால்
அதிர்ஷ்ட தசை கட்டாயம் உண்டு..
காத்திருந்தால் காலம் உனக்கு
பெரிய வெற்றியைத் தரும்..
பாதியில் முயற்சியை விட்டவன்தான்
பாதாளத்தில் விழுவான்..
தொடர் முயற்சி செய்பவனுக்கு
பாவாதிபதி தசையும் நல்லதை செய்யும்...
ஏழரைச்சனியில் எல்லாருக்கும் துன்பம் உண்டு
பாவ கிரக தசையில்
பங்கம் உண்டு..
அகப்பட்டுக்கொள்வது
அஷ்டம சனியில்
அவதிகள்படுவது
6, 8, 12 தசைகளில்..
செவ்வாய், சனி, ராகு- கேது தொடர்புகள் உள்ளவர்க்கு
கஷ்டங்கள் வராமல் இருக்காது..
உன் கட்டத்தில் கிரக நிலை பார்த்து முயற்சிகளைச் செய்..
கிடைக்காதவற்றுக்கு ஏங்காதே..
கிடைத்ததை வைத்து
நிம்மதி தேடு
எக்காலமும் நல்லதே நடக்கும்...